1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. radhika sarathkumar angry about press

அஞ்சலி செலுத்தும் இடம் சர்க்கஸ் மாதிரி ஆகிவிட்டது!.. ராதிகா காட்டமான பதிவு!...

radhika
மறைந்த நடிகர் மற்றும் இயக்குனர் கே.பாக்யராஜுடன் இன்று போய் நாளை வா, தாவணிக் கனவுகள் போன்றபடங்களில் நடித்தவர் ராதிகா. தற்போது கூட ஒரு புதிய படத்தில் பாக்யராஜுடம் ராதிகா நடித்து வந்தார். இந்த நிலையில்தான் பாக்கியராஜ் மரணம் அடைந்தது அவருக்கு சோகத்தை கொடுத்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்புதான் ராதிகாவின் குரு பாரதிராஜா இறந்து போனார். அந்த துக்கத்திலிருந்தே ராதிகா இன்னமும் வெளிவராத நிலையில் தற்போது பாக்கியராஜும் இறந்து  போனது அவருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது..

பாக்யராஜ் இறந்தது முதல் அவரின் உடலை அடக்கம் செய்யப்படும் வரை உடன் இருந்தார் ராதிகா. அதேபோல் கூட்ட நெரிசலில்  சிக்கி அங்கிருந்து அவர் வெளியே வர முயன்ற வீடியோக்களும் வெளியானது.

இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள ராதிகா ‘ பாக்கியராஜுக்கு அஞ்சலி செலுத்தும் இடத்தை சிலர் சர்க்கஸ் போல மாற்றிவிட்டனர். துக்கமான நேரத்தில் கூட அமைதி காக்க தெரியாத அளவுக்கு நாம் இரக்கமற்றவர்களாக மாறிவிட்டோம். திரை பிரபலங்களின் இறுதி ஊர்வலங்களில் கூட்டத்தை முறைப்படுத்தவும், கண்ணியத்தை காப்பாற்றவும் அரசாங்கம் மற்றும் திரைத்துறை இணைந்து சில புதிய நெறிமுறைகளை வகுக்க வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தி வலியுறுத்தி இருக்கிறார்..

radhika

சமீப காலமாக முக்கிய பிரபலங்கள் மரணமடையும் போது பத்திரிக்கையாளர்கள் அங்கே சென்று அஞ்சலி செலுத்த வருபவர்களை வழிமறித்து அவர்களின் கருத்துக்களை கேட்பது வாடிக்கையாக வருகிறது. இது பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது. பாரதிராஜாவின் மறைவுக்கு வந்த இயக்குனர் தியாகராஜன் குமாரராஜன் ‘உங்களுக்கெல்லாம் வெட்கமா இல்லையா?’ என்று திட்டிய வீடியோ அப்போது வெளியானது குறிப்பிடத்தக்கது.