தொடர்புடைய செய்திகள்
- திமுக எம்.எல்.ஏக்கள் பலர் அதிமுக அமைச்சர்களிடம் தொடர்பில் உள்ளனர்: விபி துரைசாமி
- ஜாதி, மதத்தை உரம் போட்டு வளர்க்கும் கட்சி திமுக: விளாசிய துரைசாமி!
- பாஜக சித்தாந்தமே சரிவரும்: திராவிடத்தை தூக்கி எறிந்த வி.பி.துரைசாமி!
- பாஜகவில் இணைகிறார் வி.பி. துரைசாமி: தமிழக அரசியலில் பரபரப்பு
- திமுக துணை பொதுசெயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி துரைசாமி விடுவிப்பு
திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கைது! அதிர்ச்சியில் தொண்டர்கள்!
திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இட ஒதுக்கீடு பற்றியும், நீதிபதிகள் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காககக் கைது செய்யப்பட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர் எஸ் பாரதி, இட ஒதுக்கீடு என்பது திமுக போட்ட பிச்சை எனவும் அதனால் இப்போது ஒடுக்கப்பட்ட மக்கள் நீதிபதியாக இருப்பதாகவும் பேசினர். அவரின் இந்த பேச்சு பலத்த சர்ச்சைகளை எழுப்பிய நிலையில் பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இது சம்மந்தமாக அவர் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் இப்போது அதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை அவர் வீட்டில் வைத்து காவலர்கள் அவரைக் கைது செய்துள்ளனர்.
