ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 22 மே 2020 (19:30 IST)

திமுக எம்.எல்.ஏக்கள் பலர் அதிமுக அமைச்சர்களிடம் தொடர்பில் உள்ளனர்: விபி துரைசாமி

திமுக துணைப் பொதுச்செயலாளர் விபி துரைசாமிஅவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக தமிழக தலைவர் எல். முருகன் அவர்களை சந்தித்ததால் அதிர்ச்சி அடைந்த திமுக தலைமை நேற்று அவரை பொறுப்பில் இருந்து நீக்கியது. இதனை அடுத்து இன்று விபி துரைசாமி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஒருவரே பாஜகவில் இணைந்து உள்ளது திமுக தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 
 
மேலும் விபி துரைசாமியை அடுத்து மேலும் சிலர், அதிமுக மற்றும் பாஜகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில் விபி துரைசாமி பேட்டி ஒன்றில் கூறுகையில் ’திமுக எம்எல்ஏக்கள் பலர் அவர்கள் சமுதாயம் சார்ந்த அதிமுக அமைச்சர்களிடம் இன்னும் தொடர்பில் இருக்கின்றார்கள் என்றும் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுகவில் இருந்து பலர் வெளியேறி அதிமுக மற்றும் பாஜகவிற்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இவ்வாறு நடந்தால் அது திமுகவிற்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் திமுக ஆட்சியில் இல்லாத நிலையில் வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது. இந்த நிலையில் திமுகவில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறினால் அது திமுகவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து கூறி வருகின்றனர்