திமுக துணை பொதுசெயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி துரைசாமி விடுவிப்பு
திமுக துணை பொதுசெயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி துரைசாமி விடுவிப்பு
திமுக துணை பொதுசெயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி துரைசாமி விடுவிக்கப்பட்டதால் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்டுள்ள வி.பி.துரைசாமிக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜ் திமுக துணை பொதுசெயலாளராக பணியாற்றுவார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கழக துணை பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வரும் வி.பி.துரைசாமி அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து அவருக்கு பதிலாக திமுக துணை பொதுச்செயலாளராக அந்தியூர் செல்வராஜ் எம்பி அவர்கள் தலைமை கழகத்தால் நியமிக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது
சமீபத்தில் விபி துரைசாமி அவர்கள் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை அக்கட்சித் தலைமை அலுவலகத்துக்கே சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு திமுக தலைமையை கோபமடையச் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து விளக்கம் கேட்டு வி.பி.துரைசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளதாக திமுகவினர் தெரிவித்த நிலையில் தற்போது அவர் திடீரென பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார