வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 ஜூன் 2023 (17:20 IST)

கல்யாண வீட்டின் தாம்பூல பையில் குவார்ட்டர் பாட்டில்.. திகைத்த விருந்தினர்கள்..!

கல்யாண வீட்டிற்கு வந்த விருந்தினர்களுக்கு தாம்பூல பையுடன் ஒரு குவாட்டர் பாட்டில் கொடுத்த பெண் வீட்டாரின் செய்கையால் கல்யாண விருந்துக்கு வந்தவர்கள் திகைத்துப் போனார்கள்.
 
 பொதுவாக தாம்பூல பையில் தேங்காய், பழம், மஞ்சள், வெற்றிலை பாக்கு இனிப்பு வகைகள் மற்றும் சில மங்களகரமான பொருட்கள் இருக்கும் என்பது தெரிந்ததே. ஆனால் சமீபத்தில் பாண்டிச்சேரியில் நடந்த திருமணத்தில் தாம்பூல பையில் ஒரு குவாட்டர் பாட்டிலையும் வைத்து விருந்தினர்களுக்கு பெண் வீட்டார் கொடுத்தனர். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
தாம்பூல பையில் குவாட்டர் பாட்டிலை எடுத்து வைப்பதை பார்த்த விருந்தினர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர் என்பதும் இதுவரை கேள்விப்படாத வகையில் இந்த செயல் உள்ளது என்றும் குறிப்பிடத்தக்கது. 
 
இது குறித்து கல்யாண விருந்துக்கு வந்தவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த கலாச்சாரம் மிகவும் மோசமானது என்றும் கல்யாண வீடு என்பது ஒரு புனிதமான வீடு என்றும், ஒரு தம்பதியினர் வாழ்க்கையை தொடங்க இருக்கும் ஒரு மங்கலமான நிகழ்ச்சியில் விருந்துக்கு வருபவர்களை குடிகாரர்கள் ஆக்குவது சரியானது அல்ல என்றும் இந்த வீடியோவை பார்த்த பல கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.
 
 
Edited by Mahendran