வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 29 மே 2023 (21:52 IST)

சமூக வலைதள நேரலையில்...ஒரே நேரத்தில் 7 பாட்டில் மதுகுடித்த இளைஞர் பலி

china
சீனாவின்  ஜியாங்சு என்ற பகுதியைச் சேர்ந்த வாங் என்பவர் அதிக சீன வோட்காவை குடித்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் வசிப்பவர் வாங். இவர் சமூக வலைதளமான டிக்டாக் வெர்சனான டூயிங்கில்  தான் மது குடிப்பதை  நேரலை செய்துள்ளார்.

அப்போது, ஒரே நேரத்தில் சீன வோட்காவான பைஜியு என்ற மதுவகையை 7 பாட்டில் குடித்துள்ளார். பின்னர், மதுகுடித்த 12 மணி நேரத்தில் அவர் உயிரிழந்தார்.

மதுகுடிப்பதில் ஆர்வம் உள்ளவரான வாங், அடிக்கடி அதிக மது குடித்து  நேர்லை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்த நிலையில் அவரது சமூக வலைதள கணக்கு தடை செய்யப்பட்டது. ஆனால், புதிய கணக்கை ஆரம்பித்து அவர் நேரலையில் அதிகளவில் மதுபானம் குடித்து உயிரிழந்தது  விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.