வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 18 மே 2023 (13:57 IST)

ஆவின் தண்ணீர் பாட்டில் விரைவில் அறிமுகம்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்..!

aavin
ஆவின் தண்ணீர் பாட்டில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 
 
பால்வளத்துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்ற அமைச்சர் மனோ தங்கராஜ் ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆவினில் இனி உறுதியான மாற்றத்தை பார்ப்பீர்கள் என்று கூறிய அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவின் தினசரி பால் கையாளும் திறனை 40 லட்சம் லிட்டரில் இருந்து 70 லட்சம் லிட்டராக உயர்த்த இந்த ஆண்டுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் ஆவின் தண்ணீர் பாட்டில் திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வெளியிடப்படும் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தற்போது தனியார் நிறுவனங்கள் தண்ணீர் பாட்டிலை விற்பனை செய்து வரும் நிலையில் ஆவின் நிறுவனம் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்தால் குறைந்த விலையில் தரமான மினரல் வாட்டர் கிடைக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva