1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. pravin chakravarthi twitt about whistle

2026 தேர்தலுக்கு விசில் ஊதியாச்சி!.. பிரவீன் சக்ரவர்த்தி டிவிட்!...

pravin chakravarthi
தமிழக அரசியலில் கடந்த பல வருடங்களாகவே காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்தித்து வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 5 சதவீத வாக்குகள் இருக்கிறது. அதேநேரம் பல வருடங்களாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் காங்கிரசுக்கு திமுக இதுவரை பங்கு கொடுத்ததே இல்லை.

ஆனால், தற்போது காங்கிரசுக்கு ஆட்சி மட்டும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்கிற குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. காங்கிரஸ் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி செய்தியாளர்கள் முன்னிலையில் இந்த கருத்தை சொன்னார். அதேபோல் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் இந்த கருத்தை ஆதரித்தார்.அதேபோல் டெல்லியில் உள்ள தேசிய காங்கிரஸ் தலைவர்களும் இந்த கருத்தை வலியுறுத்தினார்கள். ஆனால் காங்கிரசுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்கக் கூடாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது.

இந்நிலையில்தான் விஜயின் தவெக சின்னத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது. இந்நிலையில் பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் ‘தமிழகத்தில் 2026 தேர்தலுக்கான விசில் ஊதப்பட்டுவிட்டது.. அனைத்து கட்சிகளும் தயார்’ என பதிவிட்டிருக்கிறார்.

பிரவீன் சக்கரவர்த்தி ஏற்கனவே விஜயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது வரை அது பற்றிய உறுதியான செய்தி எதுவும் வெளியாகவில்லை.
அடுத்த கட்டுரையில்
உனக்கெல்லாம் மன்னிப்பே இல்ல.. வெட்கமா இல்லயா?!.. சிறைவாசலில் இளைஞர்கள் ஆத்திரம்...