ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Siva
Last Modified: ஞாயிறு, 21 மே 2023 (11:29 IST)

தினமும் ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்க முடிவு.. டெண்டர் வெளியிட்ட ஆவின்..!

தினமும் ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்க ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ள நிலையில் அது குறித்த டெண்டர் வெளியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னால் பால்வளத்துறை அமைச்சர் ஆவின் நிறுவனத்தின் மூலம் மினரல் வாட்டர் பாட்டில் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவித்தார். 
 
இந்த நிலையில் பெட் பாட்டில்கள் மூலம் ஒரு லிட்டர், அரை லிட்டர் வகைகளில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வாட்டர் பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ]
 
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்தின் அனைத்து விற்பனை நிலையங்கள் மூலமாக குடிநீர் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. 
 
பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை தொடர்ந்து மினரல் வாட்டர் விற்பனையையும் தொடங்க ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் இதற்கு நல்ல ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva