1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Puducherry old lady abused by a youngster

மதுபோதையில் மூதாட்டி வன்கொடுமை; இளைஞர் வெறிசெயல்! – புதுவை அருகே அதிர்ச்சி!

Tamilnadu
புதுச்சேரி அருகே மதுபோதை இளைஞர் ஒருவர் மூதாட்டியை வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி எல்லை பகுதியான பாகூரை சுற்றி மதுக்கடைகள் மற்றும் சாராய கடைகள் பல செயல்பட்டு வருகின்றன. அந்த கடைகளில் குறைந்த விலைக்கு மது கிடைக்கும் என்பதால் கடலூர் மாவட்ட பகுதியிலிருந்து பலர் மது அருந்த இந்த பகுதிகளுக்கு வருகின்றனர்.

இந்நிலையில் அந்த பகுதியில் 63 வயது மூதாட்டி ஒருவர் விவசாயம் செய்ய வயலுக்கு சென்றுள்ளார். அங்கு மது அருந்திவிட்டு இருந்த வாலிபர் ஒருவர் மூதாட்டியிடம் பேச்சு கொடுத்தபடி திடீரென கட்டையால் தாக்கியுள்ளார். இதனால் மூதாட்டி மயங்கிய நிலையில் அவரை அந்த இளைஞர் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டு சென்றுள்ளார். வயலில் மயங்கிய நிலையில் கடந்த மூதாட்டியை அவரது வீட்டினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு! – சிபிஐ விசாரிக்க உத்தரவு!