1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Pallikalvi thurai order to school head masters

நேரடி வகுப்புகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்! – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

Tamilnadu
நாளை முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் நேரடி வகுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதலாக மெல்ல பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் இந்த மாதத்தில் ஒமிக்ரான் பாதிப்புகள் அதிகரித்ததால் இந்த மாத இறுதி வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நாளை முதல் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகளை பள்ளிகள் தொடங்கியுள்ளன. பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ள பள்ளிக்கல்வித்துறை, பள்ளிகளில் நேரடி வகுப்புக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், பள்ளி திறந்தபின் மாணவர்கள் வராமல் இருந்தால் அதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு! – சிபிஐ விசாரிக்க உத்தரவு!