1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 31 ஜனவரி 2022 (10:47 IST)

பொது அமைதியை குலைக்கும் பதிவு!? – மற்றொரு பாஜக பெண் நிர்வாகி மீது வழக்கு!

சமூக வலைதளங்களில் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பதிவிட்டதாக மற்றொரு பாஜக பெண் நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீப காலமாக மதரீதியான மோதல்களை தூண்டும் விதமான சமூக வலைதள கருத்துகள் மீது காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கு ஒன்றில் சமீபத்தில் பாஜக பிரமுகர் மனோஜ் செல்வம் கைது செய்யப்பட்ட நிலையில் மத வெறுப்பு, பொது அமைதியை குலைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை என காவல் ஆணையர் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் மதப்பிரச்சினையை ஏற்படுத்தி பொது அமைதியை குலைக்கும் விதமாக பதிவிட்டதாக பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதா மணி மீது போலீஸார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து பாஜகவினர் இந்த வழக்குகளில் சிக்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.