1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Puducherry liquors store have a crowd

நீண்ட நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறப்பு; உற்சாகமாக குவிந்த மதுப்பிரியர்கள்!

Puducherry
புதுச்சேரியில் ஊரடங்கு காரணமாக நீண்ட காலம் மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மதுப்பிரியர்கள் மதுவாங்க குவிய தொடங்கியுள்ளனர்.

தமிழகம், புதுச்சேரில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. புதுச்சேரியில் கடந்த 42 நாட்களாக ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் முழுவதுமாக மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் புதுச்சேரி ஊரடங்கில் இன்று முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுச்சேரி மக்கள் மட்டுமன்றி காரைக்கால் – புதுச்சேரி எல்லை பகுதியையொட்டி உள்ள மக்களும் மதுபானங்கள் வாங்க புதுச்சேரி மதுக்கடைகளில் குவிந்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
தடுப்பூசிக்கு உலகளாவிய டெண்டர் இனி இல்லை: அமைச்சர் மா சுப்பிரமணியம் தகவல்