கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும்: உரிமையாளர்கள் கோரிக்கை
ஊரடங்கினால் சிறிய திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர் என்றும், ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளதால் திரையரங்க உரிமையாளர்கள் மிகவும் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
முக்கியமாக சிறிய திரையரங்கு உரிமையாளர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். திரையரங்கு வருமானம் தடைபட்டு உள்ளதால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலைக்கு உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். வருமானம் இல்லாததால் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளதாக திரையரங்கு ஊழியர்கள் வேதனை தெரிவித்தனர்
இந்த நிலையில் ஒருசில கட்டுப்பாடுகளுடன் சிறிய திரையரங்குகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சிறிய திரையரங்குகளுக்கான வரியையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.