இன்று முதல் தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள்: என்னென்ன கடைகள் திறக்கலாம்?
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தியதை அடுத்து இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது
இன்று முதல் என்னென்ன கடைகள் தரலாம் என்பது குறித்த தகவல் தற்போது பார்போம், தமிழ்நாடு முழுவதும் உள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் சேவைக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காய்கறி கடைகள் மளிகை கடைகள் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது
டாஸ்மார்க் திரையரங்குகள் வணிக வளாகங்கள் திறக்கக் கூடாது அதேபோல் பள்ளி கல்லூரிகள் இயங்காது என்றும் அரசியல் நிகழ்வு தொடர்ந்து தடை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் மேற்கண்ட தளர்வுகள் கிடையாது என்றும் தமிழக அரசு அறிவித்து உள்ளது
தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் பொதுமக்கள் தேவை இன்றி வெளியே வரவேண்டாம் என்றும் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியே மாஸ்க் அணிந்து பாதுகாப்புடன் வர வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது