ஜூன் 21 முதல் இலவச கொரோனா தடுப்பூசி...
நாடு முழுவதும் வரும் 21 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியை இலவசமாக வழங்க திட்டம்.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது.
இந்நிலையில் நேற்று இது குறித்து பேசிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் வரும் 21 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியை இலவசமாக வழங்கும் வகையில், மத்திய அரசே மாநிலங்களுக்கு விநியோகம் செய்யும் என அறிவித்துள்ளார்.
அதோடு, இந்தியாவில் விரைவில் மேலும் 3 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மத்திய அரசு தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு விநியோகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.