தொடர்புடைய செய்திகள்
- அதிமுக கூட்டத்தில் காலி சேர்களை படம் பிடித்த நிருபருக்கு அடி உதை - மன்னிப்பு கேட்ட அமைச்சர்!
- புதுச்சேரியில் நடந்தது ஜனநாயக படுகொலை: வைகோ ஆவேசம்
- ஆட்சி கவிழ்ப்புக்கு காரணமான திமுக எம்.எல்.ஏ! – கட்சியை விட்டு தூக்கிய திமுக!
- நீங்கள் ஆணையிட்டால் அதைச் செய்வேன் – முதல்வர் பழனிசாமி
- ஜெயலலிதா பிறந்தநாளில் தீபம் ஏற்றுங்கள்! – எடப்பாடியார் கோரிக்கை!
திமுக எம்.எல்.ஏவை அடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏவும் நீக்கம்!
திமுக எம்.எல்.ஏவை அடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏவும் நீக்கம்!
திமுக எம்எல்ஏ வெங்கடேசன் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
புதுவையில் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு திமுக எம்எல்ஏ திடீரென பதவி விலகியதால் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இந்த நிலையில் கட்சித் தலைமையிடம் ஆலோசிக்காமல் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த திமுக எம்எல்ஏ வெங்கடேசன் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கி வைப்பதாக தலைமை அறிவித்துள்ளது. கட்சியின் செயல் பாட்டை மீறி நடந்து கொண்டதால் நீக்கப்படுவதாக புதுவை மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அடுத்த கட்டுரையில்
