செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 22 பிப்ரவரி 2021 (16:46 IST)

ஆட்சி கவிழ்ப்புக்கு காரணமான திமுக எம்.எல்.ஏ! – கட்சியை விட்டு தூக்கிய திமுக!

புதுச்சேரியில் திமுக எம்.எல்.ஏ உள்ளிட்டோர் ராஜினாமா செய்ததால் ஆட்சி கவிழ்ந்த நிலையில் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ திமுகவை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி சட்டமன்றத்தில் ஆளும் காங்கிரஸின் 5 எம்.எல்.ஏக்கள், கூட்டணியான திமுக எம்.எல்.ஏ ஒருவர் உள்ளிட்ட 6 பேர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாததால் நாராயணசாமியின் தலைமையிலான சட்டப்பேரவை கலைக்கப்பட்டது.

இந்நிலையில் ஆட்சி கவிழும் வகையில் ராஜினாமா செய்த திமுக எம்.எல்.ஏ வெங்கடேசனை திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகள், பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.