நீங்கள் ஆணையிட்டால் அதைச் செய்வேன் – முதல்வர் பழனிசாமி

palanisamy
Sinoj| Last Updated: திங்கள், 22 பிப்ரவரி 2021 (16:04 IST)

நீங்கள் ஆணையிடும் வேலைகளைச் செய்வேன் என தமிழக முதல்வரும் அதிமுக முதல்வர் வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தமிழகம் முழுவதும் திமுக,அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபடுள்ளனர். இந்நிலையில் இம்மாத இறுதியில் சட்டமன்றத்
தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் அதிமுக,திமுக ஆகிய கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், இன்று பிரசாரத்தில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது :

மக்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் நான் ஓடோடி வரக்கூடிய பழனிசாமியாக இருப்பேன். நீங்கள் ஆணையிட்டால் அதை செய்யக்கூடிய முதல்வராக நான் இருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் முதல்வர் பழனிசாமி இருவரும் கடுமையாக ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :