வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 17 செப்டம்பர் 2022 (08:34 IST)

அனைத்து பள்ளிகளுக்கும் இன்று முதல் 25-ம் தேதி வரை: அரசின் அதிரடி அறிவிப்பு!

schools
அனைத்து பள்ளிகளுக்கும் இன்று முதல் வரும் 25-ஆம் தேதி வரை விடுமுறை என புதுச்சேரி அரசு அதிரடியாக அறிவித்தது. 
 
கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு காய்ச்சல் இருமல் சளி போன்ற அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தொடர்ந்து மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் குழந்தைகளிடமிருந்து காய்ச்சல் மற்றவர்களுக்கு பரவி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக பள்ளிகளில் அதிக அளவு காய்ச்சல் பரவுவதாக செய்திகள் வருகிறது.
 
இதனை அடுத்து குழந்தைகள் வீட்டில் இருந்தபடியே முக கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று முதல் 25ஆம் தேதி வரை விடுமுறை என்றும் இந்த விடுமுறை ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் என்றும் புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமசிவாயம் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்