1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2022 (16:54 IST)

பொங்கல் முன்பதிவு: சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்!

Train
பொங்கல் விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டால் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பெருநாள் ஜனவரி 15ஆம் தேதி முதல் கொண்டாட இருக்கும் நிலையில் ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை விடப்படுகிறது 
 
இதனை ஒட்டி தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ரயில்களில் முன்பதிவு இன்று முதல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் அனைத்து ரயில்களுக்கான டிக்கெட் எல்லாம் தீர்ந்துவிட்டது. மேலும் காத்திருப்பு பட்டியலுக்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 குறிப்பாக மதுரை திருநெல்வேலி செங்கோட்டை நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ரயில்களின் டிக்கெட்டுக்கள் முற்றிலும் தீர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன