செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated: வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (07:44 IST)

பள்ளிகளில் காலை உணவு: அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் தொடக்கம்!

food
பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு என்ற திட்டத்தை மதுரையில் நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பதும் அவரே குழந்தைகளுக்கு உணவு பரிமாறியதோடு ஒரு சில குழந்தைகளுக்கு ஊட்டியும் விட்டார் என்பதையும் பார்த்தோம்.
 
இந்த நிலையில் மதுரையில் உள்ள அரசு பள்ளியில் நேற்று மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
அனைத்து மாவட்டங்களிலும் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு ரூபாய் 33.56 கோடி உதவி நிதி ஒதுக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்திற்கு அனைத்து கட்சி அரசியல் தலைவர்களும் கருத்து வேறுபாடு இன்றி பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது