ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (14:16 IST)

ஒருவர் பேட்டியளிக்கும்போது ரிக்க்ஷா கவிழ்ந்து விபத்து!

utter pradesh
உத்தரபிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த    நிலையில், அங்குள்ள சாலைகள் மோசமாக இருப்பதாக ஒருவர் பேட்டியளித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு ஒரு விபத்து நடந்துள்ளது.

 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 155.2 மிமீ மழை பெய்துள்ளது.  அதாவது அங்கிஉ ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய சராசரி ம்ழை ஒரே நாளி கொட்டித் தீர்த்துள்ளதால், இதுவரை லக்னோவில் மட்டும் 197 மி.மீ மழை அளவு பெய்துள்ளது. 


இதனால், லக்னோ முழுவதும் வெள்ளக்காடாகியுள்ளது. இந்தச் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் பள்ளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதாக அலியா பகுதியைச் சேர்ந்த ப்ரவிர் குமார் ஒரு  தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அவருக்குப் பின், சிலரை ஏற்றி வந்த ரிக்ஷா வாகனம் நீரில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டனர். இந்தக் காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.