தொடர்புடைய செய்திகள்
- பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்! – நீட் ரத்து பற்றி பேசுவாரா?
- முதல்வர் மு.க.ஸ்டாலின் அலுவலகத்தில் விஜய் சேதிபதி! – திடீர் சந்திப்பு?
- மின்கட்டணம் இன்றே கடைசி; காலநீட்டிப்பு கிடையாது! – அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!
- தமிழகத்தில் ரூ.100 ஐ தொட்டது பெட்ரோல் விலை! – அதிர்ச்சியளிக்கும் விலை நிலவரம்?
- நுரையீரலை சுத்தம் செய்யும் பானம்... தயாரிக்கும் முறை
போலீஸ் தேடும் நிலையிலும் விளையாட வந்த பப்ஜி மதன்! – ஆன்லைனில் தத்துவ மழை!
யூட்யூப் சேனலில் பெண்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் தலைமறைவான பப்ஜி மதன் நேற்று ஆன்லைனில் வந்து விளையாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளை யூட்யூபில் ஒளிபரப்புவது மற்றும் யூட்யூப் சேனலில் பல வீடியோக்களை வெளியிடுவது என யூட்யூப் பிரபலமாக இருப்பவர் மதன். தனது யூட்யூப் சேனலிலும், ஆன்லைன் விளையாட்டின்போது மதன் தொடர்ந்து பெண்களை கொச்சையான வார்த்தைகளால் பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பல பகுதிகளிலும் பப்ஜி மதன் மீது புகாரளிக்கப்ப்பட்ட நிலையில் மதனை விசாரணைக்கு நேற்று வர சொல்லி புளியந்தோப்பு சைபர் க்ரைம் போலீஸார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று மதன் காவல்நிலையத்தில் ஆஜராகத்தால் தலைமறைவானதாக அறிவிக்கப்பட்டு தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறாக போலீஸ் தேடிக் கொண்டிருக்கும்போதும் விபிஎன் மூலமாக ஆன்லைன் விளையாட்டிற்கு வந்த பப்ஜி மதன் தன்னை கைது செய்வது மூலமாக பேசுவதை ஒடுக்க முயற்சிப்பதாக கூறியுள்ளார். அதேசமயம் வழக்கம்போல கெட்ட வார்த்தைகளில் பேசாமல் தத்துவமாக பேசியுள்ளார். பப்ஜி மதனின் யுட்யூப் சேனல்களை முடக்கவும், மதனை கைது செய்யவும் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
