திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 15 ஜூன் 2021 (10:45 IST)

முதல்வர் மு.க.ஸ்டாலின் அலுவலகத்தில் விஜய் சேதிபதி! – திடீர் சந்திப்பு?

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் நடிகர் விஜய் சேதுபதி சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் கொரோனா நிவாரண பணிகளை மேற்கொள்ள முதல்வரின் நிவாரண கணக்கிற்கு பலர் நிதியளித்து வருகின்றனர். சமீப காலமாக சிறுவர்கள் பலர் தாங்கள் சைக்கிள், லேப்டாப் வாங்க வைத்திருந்த பணத்தையும் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி வந்தனர். மேலும் அரசியல் கட்சிகள், தொழிலதிபர்கள், நடிகர்களும் முதல்வர் நிவாரண நிதிக்கு தொடர்ந்து நிதி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நடிகர் விஜய் சேதுபதி முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் நேரில் சந்தித்துள்ளார். கொரோனா நிதியை நேரடியாக முதல்வரிடம் வழங்க விஜய் சேதுபதி சென்றுள்ளார் என கூறப்படுகிறது.