தமிழகத்தில் ரூ.100 ஐ தொட்டது பெட்ரோல் விலை! – அதிர்ச்சியளிக்கும் விலை நிலவரம்?
இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை ரூ.100 ஐ தொட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்டவற்றால் ஏற்கனவே மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள நிலையில், தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது மேலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே வேகமாக உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை 5 மாநில தேர்தலின் போது விலையேற்றம் காணாமல் ஒரே விலையில் நீடித்து வந்தது.
தற்போது மீண்டும் விலை உயர தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100 தாண்டி விற்பனையாகி வருகிறது. பல்வேறு மாநிலங்களை தொடர்ந்து இன்று தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.100 ஐ தொட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 99.76 காசுகளுக்கு விற்பனையாகி வருகிறது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 97.69 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 91.92 ரூபாயுமாக விற்பனையாகி வருகிறது.