மின்கட்டணம் இன்றே கடைசி; காலநீட்டிப்பு கிடையாது! – அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!
தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த இன்றே கடைசி என்றும், காலநீட்டிப்பு கிடையாது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் மே 10ம் தேதிக்குள்ளான மின்கட்டணத்தை செலுத்த கால நீட்டிப்பு செய்யப்பட்டது. காலநீட்டிப்பு செய்யப்பட்ட அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இதற்கு மேல் கால அவகாசம் அளிக்கப்படாது என்றும், மின்கட்டணம் செலுத்த இன்றே கடைசி நாள் என்றும் தெரிவித்துள்ளார்.