மோடி-ஸ்டாலின் சந்திப்பு: என்னென்ன கோரிக்கைகள்?
தமிழக முதல்வராக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்கள் விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பார் என்றும் தமிழகத்தின் தேவைகளை அவர் கேட்டுப் பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடியை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஜனவரி 17-ஆம் தேதி சந்திக்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டது இதனை அடுத்து நாளை அவர் டெல்லி செல்வார் என்றும் நாளை மறுநாள் பிரதமர் மோடியை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு வேண்டுமென்றும், ஜிஎஸ்டி பண நிலுவை தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டும் என்றும், தமிழகத்திற்கு தடுப்பூசியை தாராளமாக அனுப்ப வேண்டுமென்றும் கோரிக்கைகளை அவர் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என்றும் அவர் பிரதமரிடம் கேட்டுக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
பிரதமர் மோடியை ஜூன் 17ஆம் தேதி காலை பத்து முப்பது மணிக்கு டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலக முதல்வர் சந்திக்க இருப்பதாகவும் இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பின்போது செங்கல்பட்டு தடுப்பு ஊசி ஆலையில் தடுப்பூசி உற்பத்தி தொடங்க தமிழக அரசுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டெல்லி பயணத்தின்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சோனியா காந்தியையும் முக ஸ்டாலின் அவர்கள் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.