1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (13:27 IST)

ஆளுநர் மாளிகை முற்றுகை – காஷ்மீர் பிரச்சனையில் தமிழகத்தில் முதல் போராட்டம்

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை அடுத்து தமிழகத்தில் இன்று காலை சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்பட்டது.

மாநிலங்களவையில் நேற்றுக் காலை 11 மணிக்கு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும் இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கபடடுவதாகவும் அமித்ஷா அறிவித்தார். இதற்குப் பலமான ஆதரவுகளும் எதிர்ப்புகளும் பலமாக எழுந்துள்ளன.

காஷ்மீரில் முழுக்க முழுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாலும் துணை ராணுவம் குவிக்கப்பட்டு இருப்பதாலும் அங்கு எந்தவிதமானப் போராட்டங்களும் எழவில்லை. இந்நிலையில் இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழகத்தில் இன்று போராட்டம் தொடங்கியுள்ளது.

தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி, மனித நேய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவ சுப வீரபாண்டியன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், எஸ்டிபிஐ அமீர் அம்சா, தமுமுக நெல்லை உஸ்மான்கான் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பின் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் சென்னையில் சைதாப்பேட்டையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் அவர்களை 12.30 மணிக்கு போலீஸார் கைது செய்து வாகனங்களில் ஏற்றி அழைத்துச் செல்கின்றனர்.