1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (12:27 IST)

பாக். - சீனாவை எதிர்த்து உயிரை கொடுப்பேன்: அமித்ஷா ஆவேசம்!

உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் காஷ்மீருக்காக என் உயிரையும் கொடுப்பேன் என ஆவேசமாக பேசியுள்ளார். 
 
நேற்று மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான விவாதமும் நடைபெற்று வருகிறது. 
 
இதற்கு எதிர்ப்புகள் அதிக உள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீருக்காக என் உயிரையும் கொடுப்பேன். 370 சட்டப்பிரிவை மாற்றியமைக்கலாம் என ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. 
 
ஜம்மு - காஷ்மீர் என நான் குறிப்பிடுவது பாகிஸ்தான் மற்றும் சீனா ஆக்கிரமைப்பு பகுதிகளையும் சேர்த்துதான். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்க என் உயிரையும் கொடுக்க தயார் என தெரிவித்துள்ளார்.