1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 28 செப்டம்பர் 2020 (17:20 IST)

உயிருக்கே உலை... முதல்வர் எடப்பாடிக்கு கூடுதல் பாதுகாப்பு!

முதல்வர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழக முதல்வருக்கு z+ பாதுகாப்பு, சிஐடி பிரிவு மற்றும் சென்னை காவல்துறை ஆகியவற்றின் மூலம் வீடு, அலுவலகம் மற்றும் கான்வாய்களில் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் 24 மணி நேரம் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் தமிழக காவல்துறைக்கு உளவுத்துறை மூலம் நேற்று கிடைத்த தகவல் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள மிக முக்கிய பிரமுகர்களுக்கு அடிப்படைவாத அமைப்பு மற்றும் சமூக விரோத அமைப்புகள் மூலம் அச்சுறுத்தல் இருப்பதாக தெரியவந்துள்ளது. 

இதன் அடிப்படையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.