செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 20 டிசம்பர் 2018 (21:38 IST)

பல்ப் வாங்கிய விஷால்: தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து சங்க தலைவர் விஷாலுக்கு எதிராக ஓரணியில் திரண்டனர். இதனால் தி.நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 
 
விஷால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி ஏ.எல் அழகப்பன், ரித்தீஸ், எஸ்வி சேகர் போன்றவர்கள் விஷாலுக்கு எதிராக சராமரியாக குற்றம் சாட்டினர். தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டி விட்டும் சென்றனர். 
 
இந்நிலையில் இன்று தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டை உடைக்க முயன்று சட்டத்தை மீறியதற்காக சங்க தலைவர் விஷாலை போலீஸார் கைது செய்து மாலை விடுவித்தனர். 
 
இந்நிலையில் விஷால் நான் தயாரிப்பாளர்களுக்கு நல்லதுதான் செய்தேன். நல்லது செய்வது முறைகேடு என்றால் நான் முறைகேடுதான் செய்கிறேன் என ஆவேசமாக பேசினார். 
 
இன்னும் இந்த பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில் சென்னை தி.நகரில் உள்ள தயரிப்பாளர்கல் சங்க அலௌவலகத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், இந்த பிரச்சனை குறித்து விசாரணை நடத்த ஆர்.டி.ஓவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.