திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 20 டிசம்பர் 2018 (19:40 IST)

கோட்டைய இடிச்சுட்டு போவீங்களோ... பெருமாள் சிலையால் திரும்பவும் சிக்கல்

வந்தவாசி அருகே கொரக்கோட்டையில் உள்ள மலையை செதுக்கி 64 அடி உயர பிரமாண்ட பெருமாள் சிலை உருவாக்கப்பட்டது. இந்த சிலை ஒரே கல்லிக் செதுக்கப்பட்டது இதன் சிறப்பு. ஆனால் இந்த சிலையால் ஒரே சிக்கல்தான். 
 
பெங்களூரில் உள்ள ஈஜிபுரா பகுதியில் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் இந்த சிலை நிறுவப்படுகிறது. இந்த சிலை பிரமாண்டமான மகாவிஷ்ணு சிலையை கொண்டுபோக துவங்கியதில் இருந்தே சிக்கல்தான். 
 
முதலில் 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் 6 டயர்கள் வெயிட் தாங்காமல் வெடித்தது. பின்னர் திண்டிவனம் பகுதியில் சென்ற போது இருபுறங்களிலும் இருந்த கடைகளை, வீடுகளை இடித்தது. இதனால் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். 
 
இப்போது செஞ்சி நகருக்குள் நுழைந்து திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை வழியாக சிலையை கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், செஞ்சி கோட்டை சுற்று சுவருக்கு இடையே செல்லும் சாலை குறுகியதாக இருப்பதால் செஞ்சிக்கோட்டை சுற்று சுவரை இடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. 
 
ஆனால், தொல்லியல் துறையினர் இதற்கு அனுமதிக்கு மறுத்துவிட்டனர். இதனால், சிலையை எடுத்து செல்வதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பெங்களூர் போவதற்குள் இன்னும் என்னென்ன சிக்கல் வருமோ...?