செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 20 டிசம்பர் 2018 (21:37 IST)

விஸ்வாசம் படத்தின் தல்லே தில்லாலே பாடல் வரிகள்

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் தீம் மியூசிக்களும் சமீபத்தில் வெளிவந்தது. இந்த நிலையில் இந்த படத்தின்  புதிய பாடல் ஒன்றை சற்றுமுன் படக்குழுவினர் வெளியிட்டு ஆச்சரியம் அளித்துள்ளனர். அருண்பாரதி எழுதிய இந்த கிராமத்து பாடலை அந்தோணிதாசன் பாடியுள்ளார். டி.இமான் இசையில் அமைந்த இந்த பாடலின் பாடலின் வரிகள் இதோ:

'நெல்லுக்கட்டு சுமக்கும் புள்ள,
நெஞ்சை கட்டி இழுக்கும் புள்ள,
சுத்திமுத்தி யாரும் இல்ல தல்லே தில்லாலே
நீ சூசகமா வாடி புள்ளே தல்லே தில்லாலே

கன்னங்கரு கருத்த மச்சான்
கைக்கு வளையல் போட்ட மச்சான்
மன்னருவா பிடிச்சிருக்கேன் தல்லே தில்லாலே
உன் பாசங்குதான் பலிக்காது தல்லே தில்லாலே

கோட்டாரு தோப்புக்குள்ள
மோட்டாரு ரூமுக்குள்ள
காட்டாறு போல வர்றேன்
தல்லே தில்லாலே
ஒரு கப்பல் ஓட்ட
நீயும் வாடி
தல்லே தில்லாலே