Last Modified வியாழன், 20 டிசம்பர் 2018 (18:24 IST)
திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் ஸ்டாலினை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேட்டியளித்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் தெரிவித்தது பின்வருமாறு, ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்டால் நிச்சயம் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் மோடி பிரதமராவது உறுதி.
பாஜக தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறது. திமுக என்னவோ பலமான கூட்டணி அமைத்தது போல பேசி வருகிறார்கள். தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த அரசியலை விட மோடி எதிர்ப்பு அரசியல்தான் உள்ளது.
கலைஞர் சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் பேசியதற்கு மோடியுடம் மன்னிப்பு கேட்க வேண்டும். கஜா புயலின் பாதிப்புகளை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் 2 நாள் சுற்றுபயணம் செய்து பார்த்ததோடு சரி.
ஆனால், பிரதமர் மோடி கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 டிவிட்டர் பதிவுகள் மூலம் வருத்தம் தெரிவித்தார். இந்து இயக்க தலைவர்களுக்கு இங்கு எதிர்ப்பு உள்ளது என பேசியுள்ளார்.