தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் முழு ஊரடங்கு என்பதெல்லாம் வதந்திதான்! – எடப்பாடியார் விளக்கம்!
- உங்க இஷ்டத்துக்கு ஆளுக்கு ஒன்னு பேசுவீங்களா? – டிடிவி பாய்ச்சல்!
- டிக்டாக்கால் வந்த விபரீதம்; உயிர்மீனை விழுங்கிய வாலிபர் பரிதாப சாவு!
- தென்கொரியாவிலிருந்து வந்த பிசிஆர் கருவிகள்! – சோதனைகள் வேகமெடுக்கிறதா?
- தமிழகத்தில் 1875 பேர் கொரோனாவுக்கு பாதிப்பு: சென்னையில் இன்றுதான் அதிகபட்சம்
பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் வேணுமா? – லஞ்சம் கேட்கும் தனியார் பள்ளிகள்!?
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்க தனியார் பள்ளிகள் பணம் கேட்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து வரும் கொரோனா பாதிப்புகளால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் இருந்த சூழலில் தேர்வுகளை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் 80 % மதிப்பெண்களும், வருகை பதிவின் அடிப்படையில் 20% மதிப்பெண்களும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண் விவரங்கள், வருகை பதிவேடு விவரங்களை இன்று மாலை 5 மணிக்குள் பள்ளி கல்வி துறையிடம் ஒப்படைக்க அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பத்தாம் வகுப்பில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற 50 ஆயிரம் வரை தனியார் பள்ளிகள் பணம் கேட்பதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
