திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 ஜூன் 2020 (12:00 IST)

மீண்டும் முழு ஊரடங்கு என்பதெல்லாம் வதந்திதான்! – எடப்பாடியார் விளக்கம்!

சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்போவதாக வெளியான தகவல்கள் பொய்யானவை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்று மேட்டூர் அணையிலிருந்து வேளாண் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மதகை திறந்து தண்ணீர் திறப்பை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பிறகு பேசிய அவர் “மக்கள் கொரோனா தொற்றின் வீரியத்தை புரிந்து கொள்ளவில்லை. பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணிவதில்லை. தேவையில்லாமல் வெளியே சுற்றாமல் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் மீண்டும் பொதுமுடக்கம் தீவிரப்படுத்தப்படலாம் என்று செய்திகள் உலா வருவது குறித்து பேசிய அவர் “தமிழக அரசு அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அவ்வாறாக வதந்தி பரப்பியவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என கூறியுள்ளார். முழு ஊரடங்கு குறித்தி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ள நிலையில் முதல்வர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.