திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 3 பிப்ரவரி 2022 (23:45 IST)

சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் சிறையில் அடைக்ககப்பட்ட நிலையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் கடந்த ஆண்டு ஜனவரியில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.  சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்த சக்திவேல் இன்று அதிகாலை 4:30 மணியளவில் ஜெயில் கம்பியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.