16 மாநிலங்களில் முதல் தவணை தடுப்பூசி 100% எட்டியுள்ளது- சுகாதாரத்துறை தகவல்
இந்தியாவில் உள்ள 16 மாநிலங்களில் முதல் தவணை தடுப்பூசி 100% என்ற நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு உருமாறிய கொரொனாவான ஒமிக்ரான் வைரஸ் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்குப் பரவி வருகிறது.
இந்நிலையில், ஒமிக்ரானில் இருந்து உருமாற்றம் அடைந்துள்ள பி.ஏ2 வைரஸ் ஒமிக்ரானை காட்டிலும் அதிவேகமாகப் பரவி வருவதாக ஆய்வில் தகவல் வெளியாகிறது.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் எ ன எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள 16 மாநிலங்களில் முதல் தவணை தடுப்பூசி 100% என்ற நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், 4
மாநிலங்களில் சுமார் 96.99%என்ற நிலையை எட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.