வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (08:23 IST)

பாஜக அலுவலகம் கமலாலயம் முன் பத்திரிகையாளர்கள் போராட்டம்

கடந்த சில நாட்களாகவே பாஜகவின் எச்.ராஜா பத்திரிகையாளர்கள் உள்பட பலரை கடுமையான சொற்களால் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜகவின் இன்னொரு தலைவரான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அருவருப்பான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில் பத்திரிகையாளர்களை தொடர்ந்து தரக்குறைவாக சித்தரித்து எழுதி வரும் எஸ்.வி.சேகர் மற்றும் ஹெச். ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பத்திரிகையாளர்கள் அனைவரும் இன்று மதியம் 3 மணிக்கு பாஜகவின் தமிழக அலுவலகம் கமலாலயம் கூடி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்துள்ளனர்.  
 
தொடர்ந்து கீழ்த்தரமான கருத்துகளை பகிர்ந்துவரும் பாஜகவினர் மீது நடவடிக்கைக் எடுக்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. பத்திரிகையாளர்களின் போராட்ட அறிவிப்பை அடுத்து இன்று கமலாலயத்திற்கு அதிக போலீஸ் பாதுகாப்பு போட வாய்ப்பு உள்ளது.