வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 16 ஏப்ரல் 2018 (15:37 IST)

கோச்சடையான் விவகாரம்: லதாரஜினிக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

கோச்சடையான் பட விவகாரத்தில் ஆட் பியுரோ நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய ரூ 10 கோடி கடன் தொகையை அந்நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் உத்தரவுட்டுள்ள நிலையில் மீடியா ஒன் நிறுவனம் இன்று இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது.
 
அந்த மனுவில் ஆட் பியுரோ நிறுவனத்திற்கு வழங்கவேண்டிய ரூ.10 கடன் தொகையில் ஏற்கனவே ரூ 9.2 கோடி வழங்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள ரூ 80 லட்சத்தை விரைவில் கொடுத்துவிடுவோம் என்றும் மீடியா ஒன் கூறியுள்ளது. மேலும் இந்த கடன் தொகைக்கும், லதா ரஜினிகாந்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் மீடியா ஒன் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் தனது இடைக்கால மனுவில் கூறியிருந்தது.
 
ஆனால் மீடியா ஒன் நிறுவனத்தின் இந்த மனுவை நிராகரித்து தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட் வரும் ஜூலை 3-ம் தேதிக்குள் லதா ரஜினிகாந்த் அல்லது, அவரை சார்ந்த நிறுவனம் கடன் தொகையை செலுத்த வேண்டும் என்ற தங்களது முந்தைய உத்தரவு தொடரும் என்று உத்தரவிட்டுள்ளது.