வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (18:01 IST)

நிர்மலாதேவி விவகாரம்: செய்தியாளர்களை சந்திக்கின்றார் ஆளுனர்

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி ஒன்றில் கணித பேராசிரியையாக பணிபுரிந்து வந்த நிர்மலாதேவி, அக்கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு கொண்டு செல்ல முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் நிர்மலாதேவி என்பவர் வெறும் அம்புதான். அவரை ஏவியவர் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்ற குரல் தமிழகத்தில் ஆங்காங்கே வலுத்து வருகிறது. மேலும் இந்த விவகாரத்தில் திடீரென ஆளுனர் தலையிட்டு விசாரணைக்குழு அமைத்ததும் சந்தேகத்தை எழுப்புவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
இந்த நிலையில் ராஜ்பவனில் இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார் கவர்னர் பன்வாரிலால் புரோஹித். பல பதவியேற்பு நிகழ்வுகள் நடந்த ராஜ்பவன் தர்பார் ஹாலில் முதல்முறையாக ஆளுநர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது அவர் நிர்மலாதேவி விவகாரம் குறித்து விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.;