திங்கள், 16 பிப்ரவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Bala
Last Modified: வியாழன், 22 ஜனவரி 2026 (18:19 IST)

சாட்டைய தூக்குனவருக்கே சாட்டையடி! ஜனநாயகனை விடாமல் துரத்தும் சென்சார் போர்டு

சாட்டைய தூக்குனவருக்கே சாட்டையடி! ஜனநாயகனை விடாமல் துரத்தும் சென்சார் போர்டு
ஜன நாயகன் படத்தை சுற்றி இருக்கும் பிரச்சினை என்ன? படம் வருமா வராதா என்பதை பற்றி வலைப்பேச்சு அந்தணன் அவருடைய சேனலில் பேசியுள்ளார். இதோ அவர் கூறியது: சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை கால வரையறை இன்றி தள்ளி வைத்திருக்கிறது. காலவரையறை இன்றி என்றால் அவர்கள் நினைத்தால் 13 வருடங்கள் வரை இழுத்துக் கொண்டே போகலாம். இதன் பிறகு எங்கேயும் திரும்பவும் மேல்முறையீடு செய்ய முடியாது. சென்சார் சான்றிதழை சீக்கிரம் கொடுங்கள் என சுப்ரீம் கோர்ட் போனால் கூட உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. தீர்ப்பு வரும் வரை காத்திருங்கள் என்று தான் அங்கிருந்து பதில் வரும். எங்கும் போக முடியாத அளவுக்கு மிகப்பெரிய நெருக்கடியை விஜய்க்கு கொடுத்திருக்கிறார்கள்.
 
கமல் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் வெளிவரும் பொழுது மிகப்பெரிய போராட்டத்தை அந்த திரைப்படம் எதிர்கொண்டது. அன்றைய காலகட்டத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்தார். அதற்கு என்ன காரணம் என பல்வேறு தகவல்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் இந்த படத்தை ஜெயா டிவியில் ஒளிபரப்ப அதற்கு உண்டான தொகையை எனக்கு டிடியாக கொடுங்கள். பணமாக கொடுக்க வேண்டாம் என்று கமல் கேட்டிருக்கிறார். அதுதான் மிகப்பெரிய காரணமாக இருந்தது.
 
கிட்டத்தட்ட அதே மாதிரியான நெருக்கடியை தான் இன்று விஜய்க்கும் கொடுத்திருக்கிறார்கள். சட்டம் நீதி இவையெல்லாம் முறையாகத்தான் சென்று கொண்டிருக்கின்றது. நீங்கள் ஏன் அவசரப்பட்டு நீதிமன்றத்தை நாடுனீர்கள் என எதிர்க்கட்சிகள் இங்கு பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதில் வெளியில் இருந்து விமர்சனம் வைப்பவர்கள் பெரும்பாலும் ஜனநாயகன்பட தயாரிப்பாளர் ஏன் நீதிமன்றத்திற்கு போனார் என்று தான் கேட்கிறார்கள். ஆனால் அதில் எந்த நியாயமும் இல்லை என்பதுதான் உண்மை. ஏனெனில் சென்சார் படத்தைப் பார்த்து சிலர் கட்டுகளை கொடுக்கிறார்கள்.
 
அந்த கட்டுகளை எல்லாம் நீக்கிவிட்டு மறுபடியும் சென்சாருக்கு அனுப்பி விட்டார்கள். அதன் பிறகும் சான்றிதழை கொடுப்பதுதான் முறை. அதையெல்லாம் விட்டுவிட்டு தலைமை அதிகாரி என்ன சொல்கிறாரோ அதைத்தான் கேட்போம் என சொல்வது எந்த விதத்தில் நியாயம். அதுவும் அந்த தலைமை அதிகாரி கூட மும்பையில் இருக்கும் தலைமை அதிகாரி சொல்வதைத் தான் கேட்போம் என்று சொல்வது இது ஒரு மிகப்பெரிய விதாண்ட வாதமாக பார்க்கப்படுகிறது. கடைசியில் படம் என்ன ஆகும் என்று கேட்கும் பொழுது பல சிக்கல்கள் இருக்கிறது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு கொடுக்கிறது. அது எப்பொழுது கொடுக்கிறார்கள் என தெரியாது.
 
ஒரு வாரம் ஆகலாம். 10 நாட்கள் ஆகலாம். சென்சார் சான்றிதழை கொடுக்கிறது என்று வைத்துக் கொண்டால் அதற்கு எதிராக சென்சார் போர்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு போகும். சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் அது சம்பந்தமான வழக்கு நடக்கும். ஒரு வேளை ஜனநாயகன் படத்திற்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொன்னால் ஜனநாயகன்பட நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டுக்கு போகும். இப்படியே மாறி மாறி வழக்குகள் தான் நடந்து கொண்டே போகும். இதற்கிடையில் தமிழ்நாட்டிற்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டு விடும். தேர்தல் தேதி அறிவித்த பிறகு ஒரு பெரிய தலைவர் நடித்த படம் திரைக்கு வருவதில் பெரிய சிக்கல் இருக்கிறது.
 
ஏனெனில் தன்னுடைய அரசியல் கருத்துக்களை திரையில் சொல்வார். அது மக்களை மாற்றுவதற்கு ஒரு காரணமாக அமையலாம். அதனால் அதையும் அனுமதிக்க மாட்டார்கள். என்னுடைய யூகத்தில் இந்த படம் தேர்தலுக்குப் பிறகுதான் வரும் என்று நான் கணிக்கிறேன் . விஜய்க்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். அந்த நெருக்கடியை சமாளிக்க அவர்கள் சொல்வதை கேட்டு விஜய் நடந்தால் நாளைக்கே இந்த படம் திரைக்கு வந்துவிடும் .இப்படி அதிகாரத்தை தன் கையில் வைத்துக் கொண்டு சாட்டையை எடுத்து அடி அடி என அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இது எம்ஜிஆர் காலத்தில் இருந்து நடந்து கொண்டு வருகின்றது என வலைப்பேச்சு அந்தணன் அவருடைய சேனலில் இந்த தகவல்களை பகிர்ந்து உள்ளார்.