1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Posters welcome Sasikala to Chennai

கீரீன்வேஸ் சாலையில் ராஜமாதாவே... அதிமுகவினர் அட்ராசிட்டி!!

சசிகலா
சசிகலாவை வரவேற்று அதிமுக தொண்டர்கள் உறுப்பினர் அட்டைகளுடன் போஸ்டர் ஒட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை வகித்து வந்த சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி விடுதலை ஆனார் என்பது தெரிந்ததே. தற்போது பெங்களூரில் ஓய்வு எடுத்து வரும் அவர் வரும் 8 ஆம் தேதி சென்னை வருகிறார். 
 
சென்னை கீரீன்வேஸ் சாலையில் ராஜமாதாவே வருக வருக என்று சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதே போல் விருதுநகர் மாவட்டத்திலும் சசிகலாவை வரவேற்று அதிமுக தொண்டர்கள் உறுப்பினர் அட்டைகளுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
சசிகலா விரைவில் அரசியல் பேசுவார் : வக்கீல் தகவல்!