தொடர்புடைய செய்திகள்
- விடுதலையானார் இளவரசி: சசிகலா தங்கியிருக்கும் சொகுசு விடுதிக்கு செல்வதாக தகவல்!
- செத்தா அம்மாகிட்ட, பொழைச்சா மக்கள் கிட்ட: கொரோனா பாதிக்கப்பட்டபோது சசிகலா கூறியதாக தகவல்
- சசிகலா கூட்டு, இளவரசிக்கு இன்று விடுதலை!
- அதிமுகவில் எந்த புதிய பதவிக்கும் விதிமுறைகளில் இடமில்லை: சசிகலா வழக்கறிஞர் பேட்டி
- சசிகலாவுக்கு எதிராக அமைச்சர்கள் டிஜிபியிடம் புகார்…
பீதியில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ? அவசர ஆலோசனைக்கு அவசியம் என்ன??
இன்று மாலை 5 மணிக்கு கட்சி நிர்வாகிகளுடன் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆலோசனை.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை வகித்து வந்த சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி விடுதலை ஆனார் என்பது தெரிந்ததே. தற்போது பெங்களூரில் ஓய்வு எடுத்து வரும் அவர் வரும் 8 ஆம் தேதி சென்னை வருகிறார்.
சசிகலா வருகையை வரவேற்கும் விதமாக அதிமுகவை சேர்ந்த சிலரே போஸ்டர்களை ஒட்டி கொண்டாடி வருகின்றனர். இதனால் சிலரை கட்சியை விட்டு நீக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர் அதிமுகவின் தலைவர்கள்.
இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களுடன் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆலோசனை நடத்துகின்றனர். சசிகலா வரும் வேலையில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடத்துவது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
