1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (17:44 IST)

இப்போதைக்கு நேரடி வகுப்புகள் கிடையாது: சென்னை பல்கலை அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது ஓரளவுக்கு பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.
 
ஏற்கனவே பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் வரும் 8ஆம் தேதி முதல் ,9 11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மேலும் கல்லூரிகளும் திறக்கப்படும் என சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழகம் இப்போதைக்கு நேரடி வகுப்புகள் கிடையாது என்றும் அதிரடியாக அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்றும் ஜூன் மாதத்திற்கு பிறகு தான் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்றும் அறிவிப்பு செய்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது