திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (13:04 IST)

விடுதலையானார் இளவரசி: சசிகலா தங்கியிருக்கும் சொகுசு விடுதிக்கு செல்வதாக தகவல்!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை வகித்து வந்த சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி விடுதலை ஆனார் என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் இன்று அவருடன் தண்டனை வகித்த இளவரசி விடுதலை ஆவார் என்று கூறப்பட்டது. இதனை அடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து இளவரசி சற்றுமுன் விடுதலை ஆகி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவடைந்ததை அடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த இளவரசி, சசிகலா தங்கியுள்ள சொகுசு விடுதிக்கு செல்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் இன்னும் ஓரிரு நாட்களில் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதேநேரம் சுதாகரன் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை என்றும் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை செலுத்தப்படாததால் அவர் விடுதலை ஆகவில்லை என்றும் கூறப்படுகிறது