1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. pooja hegde sharing video about vijay

யார் ஜெயிப்பா?. அப்பவே சொன்ன பூஜா ஹெக்டே.. வெட்கப்படும் விஜய்!.. கியூட் வீடியோ!...

pooja hegde
நடிகர் விஜய் இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிர அரசியல் கட்சியை தொடங்கினார். அதோடு முதல் மாநாட்டிலேயே தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி என ஆவேசமாக பேசினார். தொடர்ந்து பல மேடைகளிலும் ஆளும் கட்சியான திமுகவைமிகவும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்..

இந்நிலையில்தான், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, தமிழக முதல்வராக விரைவில் விஜய் பதவியேற்கவுள்ளார். அதேநேரம் தனி பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவு தவெகவிடம் இல்லை. எனவே வெற்றி பெற்ற மற்ற சின்ன கட்சிகளிடமிருந்து விஜய் 15 எம்எல்ஏக்களின் ஆதரவு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம், வருகிற 7ம் தேதி விஜய் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது..

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே ஒரு கியூட்டான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் ஒரு பலகையில் ‘தேர்தலில் யார் வெற்றி பெறுவார்?’ என எழுதப்பட்டிருக்கிறது. அதை காட்டி விட்டு அருகில் இருக்க விஜயை காட்டி இவர்தான் என பூஜா ஹெக்டே கண் சிமிட்டுகிறார். அதைப்பார்த்து விஜய் வெட்கத்தில் முகத்தை மூடி சிரிக்கிறார். இந்த புகைப்படம் விஜய் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.


அடுத்த கட்டுரையில்
அந்த ரெண்டு கட்சிகிட்ட விஜய் ஆதரவு கேட்கக் கூடாது!.. டிமாண்ட் வைப்பாங்க!.. பிஸ்மி டிவிட்!...