தொடர்புடைய செய்திகள்
- தமிழக அரசின் ட்விட்டர் பக்கம் ஹேக்! க்ரிப்டோகரன்சி விளம்பரம்!
- பொங்கல் பரிசுத்தொகுப்பில் வேட்டி, சேலை உண்டா? தமிழக அரசு அறிவிப்பு
- இலங்கைக்கு தமிழ்நாடு அனுப்பிய அரிசி மூட்டைகள் பயன்படுத்த முடியாத நிலையில் மீட்பு
- தமிழ்நாடு அரசின் 'மக்கள் ஐடி' என்பது என்ன? 'ஆதார்' எண்ணுக்குப் போட்டியா?
- பொங்கல் சிறப்பு ரயில் முன்பதிவு: 5 நிமிடத்தில் டிக்கெட் காலி!
முழுவதும் புக்கிங் ஆன பொங்கல் சிறப்பு பேருந்துகள்! மேலும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்!
தமிழ்நாட்டில் பொங்கலுக்காக அறிவிக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் முழுவதும் புக்கிங் ஆகியுள்ள நிலையில் முன் தேதிகளில் மேலும் சில சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்காக பலர் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பொங்கல் ஞாயிற்றுக்கிழமை வரும் நிலையில் முன்னதாக சனிக்கிழமையும் விடுமுறையாக உள்ளதால் மக்கள் ஜனவரி 13 வெள்ளிக்கிழமையில் அதிகமாக ஊருக்கு புறப்படுவர் என கணித்து போக்குவரத்து கழகம் ஜனவரி 13 முதல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவை தொடங்கியது.
ஆனால் ஜனவரி 13க்கான சிறப்பு பேருந்துகள், ரயில்கள் முழுவதும் புக்கிங் ஆகியுள்ள நிலையில் மக்கள் பலர் ஜனவரி 12ம் தேதியே சொந்த ஊர்களுக்கு கிளம்ப திட்டமிட்டு வருகின்றனர். இதனால் முன்கூட்டியே ஜனவரி 12ம் தேதியிலிருந்து சிறப்பு பேருந்துகள் சேவையை தொடங்குவது குறித்து போக்குவரத்து கழகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit By Prasanth.K
அடுத்த கட்டுரையில்
