சென்னை டிபிஐ வளாகத்தில் அன்பழகன் சிலை அமைக்க தடை கோரிய வழக்கில் திடீர் திருப்பம்!
சென்னை டிபிஐ வளாகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு பதிவு செய்த நிலையில் தற்போது அந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சென்னை டிபிஐ வளாகத்தில் மறைந்த முன்னாள் கல்வி அமைச்சர் அன்பழகனுக்கு சிலை வைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் அன்பழகன் சிலை அமைக்க தடை கோரி கோவையைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர இருந்த நிலையில் திடீரென மனுதாரர் பழனிச்சாமி தனது வழக்கை வாபஸ் பெற்றார். டிபிஐ வளாகத்தில் அன்பழகனுக்கு சிலை அமைக்க தடை கோரிய வழக்கு வாபஸ் பெற்றதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran